கருத்துப் போன தங்க நகையை பளபளப்பாக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்களுக்கு எப்போதும் நகைகள் மீது ஒரு விருப்பம் இருக்கும். இதனால் எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா? நகைகள் வாங்குவதற்கு என பெண்கள் காத்திருப்பார்கள்.
சிலர் நகைளை வாங்கி குறிப்பிட்ட விஷேசங்களுக்கு மாத்திரம் அணிந்து விட்டு கழட்டி வைத்து விடுவார்கள். இன்னும் சிலர் தினமும் நகைகளுடன்தான் இருப்பார்கள்.
இப்படி இருக்கும் பொழுது தங்கமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் பொலிவிழந்து போய் விடும். வியர்வை அல்லது தண்ணீர் அதிகமாக பட்டால் அது கருப்பாக மாறும்.
இவற்றை அதே பளபளப்புடன் வைத்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு சில தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும். அத்துடன் அதனை பராமரிக்க சில டிப்ஸ்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் கருப்பாக இருக்கும் தங்க நகைகளை எப்படி பளபளப்பாக மாற்றுவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தங்க நகைகளை சுத்தம் செய்வது எப்படி?
1. தங்க நகைகள் கருப்பாக இருந்தால் சில இரசாயன கலவைகள் சந்தையில் கிடைக்கும். அதனை கொண்டு உங்களுடைய தங்க நகைகளை சுத்தம் செய்யலாம்.
2. உங்களுடைய தங்க நகைகள் கருப்பாக மாறி விட்டது என்றால் திரவ டிடர்ஜென்ட் கொண்டு சுத்தம் செய்யலாம். அதனை திரவத்தில் போட்டு ஊறவைத்து, பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
3. நகைகளை சுத்தம் செய்ய சமையலறையில் இருக்கும் வினிகிரியை பயன்படுத்தலாம். சிறிது பேக்கிங் சோடா கலந்து தங்க நகைகளை சுத்தம் செய்தால் நகைகளை பளபளப்பாக இருக்கும்.
4. மஞ்சளுடன் சிறிது தண்ணீரில் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்து, பிரஷ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் 5 நிமிடங்களில் நகை பளபளப்பாக மாறும்.
5. டூத் பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து கரைசலை தயார் செய்து கொள்ளவும். அந்த கரைசலில் கருப்பாக இருக்கும் நகைகளை போட்டு நன்றாக அலசவும். இப்படி செய்தால் உங்கள் நகைகளில் இருக்கும் அழுக்குகள் மறைந்து நகை பார்ப்பதற்கு புதுசு போல் காட்சிக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |