ஆணுறுப்பில் இந்த பிரச்சனை இருக்கா? உங்கள் இதயம் ஜாக்கிரதை
பொதுவாக இதய நோய் அதாவது கார்ட் அட்டாக் என்பது ஒருவரை தாக்கும் முன்னர் அவர்களுக்கு சில அறிகுறிகளை காட்டும். அந்த அறிகுறிகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.
இதய நோய் அறிகுறிகள்
இந்த காலகட்டத்தின் மோசமான உணவு பழக்கத்தால் இதய நோயால் பெரும்பாலாமன மக்கள் இறக்கின்றனர். இதை கட்டுப்படுத்த எவ்வளவு வழிகள் தற்போது இருந்தாலும் தற்போது அதற்கான அறிகுறிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதனால் உயிர்களுக்கு ஆபத்து வருகின்றது.

பலரும் உணராத ஒரு விஷயம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நமது உடல் கொடுக்கும் சிறிய அறிகுறிகளுடன் இது பெரும்பாலும் அமைதியாகத் தான் தெரியும். பலரும் இதை கணக்கெடுக்க மாட்டார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது இதய நோயால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க முடியும்.
ஆனால் இந்த அறிகுறிகள் என்வென்பது யாருக்கும் தெரியாது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிகுறிகள்
விறைப்புத்தன்மை செயலிழப்பு
விறைப்புத்தன்மை செயலிழப்பு (ED) என்பது வெறும் பாலியல் பிரச்சினை மட்டுமல்ல. அது இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கை சிக்னலாகவும் இருக்கலாம் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆய்வுகளின் படி, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் பாதி பேர் இதய பாதிப்பு கண்டறியப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே விறைப்புத்தன்மை செயலிழப்பை அனுபவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஆணுறுப்பு போன்ற சிறிய தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத் தடைகள், பின்னர் கரோனரி தமனிகளில் உருவாகும் அடைப்புகளை முன்னமே சுட்டிக்காட்டும்.
இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் சரியாக செயல்படாததே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே, எந்தவிதமான மனஅழுத்தம் அல்லது வேறு தெளிவான காரணங்களும் இல்லாமல் திடீரென விறைப்புத் தொடர்பான பிரச்சினைகள் தோன்றினால், அதை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். இது உயிர் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம்.

எளிய உடற்பயிற்சியின் போது கூட மூச்சுத்திணறல்
பெரும்பாலானோர் மூச்சுத் திணறலை வயது அல்லது சாதாரண சோர்வு என புறக்கணிக்கிறார்கள். ஆனால் இதய நிபுணர்கள், எளிய உடற்பயிற்சிக்கே மூச்சு வாங்குவது இதய நோயின் ஆரம்பகால எச்சரிக்கையாக இருக்கலாம் என கூறுகிறார்கள்.
படிக்கட்டுகளில் ஏறுதல், சிறிது தூரம் நடந்தாலே அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய அறிகுறி.
இது அன்றாட செயல்களை பாதிக்கும் அளவுக்கு அதிகரித்தால், உங்கள் இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்யவில்லை அல்லது நுரையீரலுக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கலாம்.
இத்தகைய மாற்றங்களை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

பாதங்கள் அல்லது கணுக்காலில் வீக்கம்
கீழ் மூட்டுகளில் ஏற்படும் தசைப்பிடிப்பு அல்லது வீக்கத்தை பலர் சாதாரண காரணங்களால் ஏற்பட்டதாக நினைத்து புறக்கணிக்கிறார்கள்.
ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, பாதங்கள், கணுக்கால் அல்லது கீழ் கால்களில் தொடர்ச்சியாக ஏற்படும் வீக்கம் இதய நோயின் மறைமுக அறிகுறியாக இருக்கலாம்.
இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாதபோது உடலில் திரவம் தேங்கி, குறிப்பாக கீழ் பகுதிகளில் வீக்கம் தோன்றும்.
இந்த திரவத் தேக்கம் இதய செயலிழப்பு அல்லது சிறுநீரகக் கோளாறையும் குறிக்கலாம். குறிப்பாக இந்த வீக்கம் மூச்சுத் திணறலுடன் சேர்ந்து காணப்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |