நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கனுமா? அதிகாலை எழுந்தால் நடக்கும் அதிசயம்
தினமும் காலை சீக்கிரமாக எழுந்தால் ஏற்படும் நன்மையை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் அனைவரது கையிலும் மொபைல் போன் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றது.
அதிலும் இரவில் படுக்கைக்கு சென்றாலும் போனை பார்த்துக் கொண்டு பலரும் தாமதமாகவே தூங்குகின்றனர். இதனால் காலையில் தாமதமாகவே எழும் பழக்கம் அதிகரித்துள்ளது.
ஆனால் காலையில் தாமதமாக எழும் பழக்கம், ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
அதிகாலையில் எழுந்திருப்பது நாள் முழுவதும் உங்களை மகிழ்ச்சியாக வைக்கின்றது. மேலும் சுத்தமான காற்று, பறவைகளின் மென்மையான சத்தம் மற்றும் அதிகாலை நிசப்தம் ஆகியவை உண்மையில் உங்களை சந்தோஷப்படுத்தும்.
எனவே, இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
அதிகாலையில் எழுந்தால் கிடைக்கும் நன்மை
ஆய்வு ஒன்றில் அதிகாலையில் எழும்பும் குழந்தைகள் தாமதமாக எழும்பும் குழந்தைகளை விட ஆரோக்கியமாக இருக்குமாம்.
அதிகாலையில் சூரியனின் பிரகாசமான ஒளியை காண்பது உங்க மன அழுத்தத்தை குறைக்கிறது என்றும் ஆன்டிடிரஸ்ஸன் மருந்துகளை விட இது பலமடங்கு உங்களுக்குள் வேலை செய்ய உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.
அதிகாலையில் எழுந்திருக்கும் போது நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்வீர்கள். இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் திகழ்வீர்கள்.
அதிகாலை எழுந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதிகாலையில் எழுந்திருப்பது மனிதனை சிறந்த முறையில் செயல்பட வைக்கிறது.
காலை காற்று, வளிமண்டலம் குழப்பமான மனதை மாற்றி, சிறந்த மற்றும் வெற்றிகரமான மனநிலையை உருவாக்குகிறது. வளிமண்டலம் புத்துணர்ச்சியுடன் மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். எனவே நீங்கள் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
தினமும் காலையில் எழுந்து எதாவது செய்ய வேண்டும் என்பது உங்களது விருப்பமாக இருந்து பின்னாளில் லட்சியமாக மாறும்.
அதிகாலையில் எழுந்ததும் அதிக தண்ணீர் குடிப்பது, குளிர்ந்த நீர் குளியல் போன்ற நல்ல பழக்கத்தை மேற்கொண்டு வரலாம்.
தாமதமாக படுக்கைக்குச் செல்வதும், தாமதமாக எழுந்திருப்பதால் முகம் சற்று மந்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். எனவே சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுந்து, சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். அதனால் உங்கள் முகம் மலர்ந்திருக்கும். ஒரு நல்ல இரவு தூக்கம் கண்களுக்குக் நல்ல புதுணர்வை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |