காலையில் எழுந்தவுடன் தலை வலி இருக்கின்றதா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்
காலையில் எழுந்ததும் தலைவலி ஏற்படுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தலைவலி
குளிர் காலத்தில் சிலருக்கு காலையில் எழுந்ததும் தலைவலி ஏற்படும். சில நேரங்களில் லேசான வலியாக இருக்கும் இவை, சில தருணங்களில் கடுமையாகவும் காணப்படும். ஆனால் இவற்றினை புறக்கணிப்பது மிகவும் தவறாகும். த
தலைவலி ஊட்டச்சத்து இல்லாததைக் குறிக்கின்றது. குளிர்காலத்தில் எதனால் தலைவலி ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் தலைவலி
வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த ஓட்டம் இவை குளிர்காலத்தில் குறைவாக இருப்பதால், மூளைக்கு போதுமாக ஆக்ஸிஜன் செல்வதும் தடைபடுகின்றது. ஊட்டச்சத்து குறைபாட்டையும் இது குறிக்கின்றது. ஆகவே சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
நமது உடம்பிற்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கும். மெக்னீசியம் குறைவாடு நரம்புகளில் அழுத்தத்தினை ஏற்படுத்தி தலைவலிக்கு காரணமாக இருக்கின்றது.

வைட்டமின் பி2 மற்றும் பி12 இவை மூளைக்கு ஆற்றல் வழங்கி, சரியான நரம்பு செயல்பாட்டிற்கு காரணமாக இருக்கின்றது. இந்த வைட்டமின் குறைபாடுகளும் தலைவலியினை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பது நீரிழப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகின்றது. இதனால் தலைவலி ஏற்படும்.

இரும்புச்சத்து குறைபாடு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படும். எனவே சீரான மற்றும் சத்தான உணவு அவசியம் ஆகும்.
ஊட்டசத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மெக்னீசிய சத்துக்கு பாதாம், பூசணி விதை, கீரை மற்றும் வாழைப்பழம் இவற்றினை சாப்பிடலாம். மேலும் பி2 மற்றும் பி12 சத்துக்கு முட்டை, தயிர், பால், முழு தானியங்கள் இவற்றினை எடுத்துக் கொண்டால் மூளைக்கு ஆற்றலை வழங்கி காலையில் ஏற்படும் சோர்வை போக்குகின்றது.

இரும்புசத்தை சரிசெய்வதற்கு கீரை, வெல்லம், கொண்டக்கடலை மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுவது சிறந்ததாகும். வால்நட்ஸ், சியா விதை, ஆளி விதை இவைகள் கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும். இவை தலைவலியை போக்க உதவுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |