வெறும் இலையில் இத்தனை நன்மைகளா? இது தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க
பழம், இலை, பூ, பட்டை என மாதுளை மரத்தின் அனைத்து பகுதிகளையும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தலாம். அதிலும் மாதுளை பழம் போலவே, இலையும் மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது.
மாதுளையில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளன.இதை சாப்பிடும்போது, புற்றுநோய் பாதிப்புகள் வராமல் தடுக்கும் அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும்கூட, மாதுளம் பழத்தை விடாமல் சாப்பிடுவார்கள்.
மாதுளை இலையின் பயன்கள்
உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை இலை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
மாதுளையில் இலையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.
வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்’ சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.
மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.
திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம்.
இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்களும், மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
இப்படி, மாதுளை பழங்கள் எந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே, இலைகளும் உடலுக்கு நன்மையை தருகின்றன. முக்கியமாக, வைட்டமின் C உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இலைகள் உதவுகின்றன.
அதனால்தான், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மாதுளை இலையில் டீ, அல்லது கசாயம்போல காய்ச்சி தருவார்கள்.
இது சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும். தொண்டை வலி தீரும்.. அதேபோல, இந்த இலைகளின் தண்ணீரை இப்படி கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்துவிட்டு படுத்தால், தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.
உடல் எடை குறைய நினைப்பவர்கள், குறிப்பாக தொப்பை இருப்பவர்கள், இந்த இலையின் தண்ணீரை குடித்து வந்தால் விரைவில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |