குருவின் பயணத்தில் திடீர் திருப்பம் - டிசம்பர் 13 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்!
நவகிரகங்களில் குருபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குருபகவான் முன்னேற்றம், வளர்ச்சி, அதிர்ஷ்டம், புதிய வாய்ப்புகள் மற்றும் நற்பலன்களை வழங்கக்கூடிய சுப கிரகமாக விளங்குகிறார்.
குறிப்பாக, ஞானம், அறிவு, கல்வி, செல்வம், செழிப்பு, ஆன்மீகம், திருமணம் மற்றும் வாழ்க்கையில் விரிவாக்கம் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு குருபகவான் காரகத்துவம் வகிக்கிறார். எனவே, குருபகவானின் ராசி மாற்றமும், அவரது வக்ர மற்றும் நேர்கதிப் பயணங்களும் ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதியன்று குருபகவான் சிம்ம ராசியில் வக்ர கதியில் பயணிக்கத் தொடங்குகிறார். இருப்பினும், இந்த வக்ரப் பயணத்திற்காக அவர் சிம்ம ராசியில் நீண்ட காலம் தங்கியிருக்க மாட்டார்.
அதன்படி, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியன்று மீண்டும் கடக ராசிக்கு இடம்பெயர்கிறார். தொடர்ந்து, ஏப்ரல் 13-ஆம் தேதியன்று கடக ராசியிலேயே தனது வக்ரப் பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார்.

குருபகவானின் இந்த வக்ர மற்றும் நேர்கதிப் பயணங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தினாலும், குறிப்பாக இந்த 3 ராசிகளுக்கு பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கும். அப்படி அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, சிம்ம ராசியில் குருவின் வக்ரப் பெயர்ச்சி கல்வி, படைப்பாற்றல், காதல் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
மன அழுத்தம் குறைந்து, குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். நிதி நிலை மேம்படுவதுடன், வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும். வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் செய்பவர்களுக்கும் லாபம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய சாதகமான காலமாக இது அமையும். குடும்பத்தினருடன் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டு.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் தைரியம், தகவல் தொடர்பு மற்றும் பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்.
அலுவலகத்தில் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.
இதுவரை நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயணங்களும் அமையலாம். இருப்பினும், கோபத்தையும் ஈகோவையும் கட்டுப்படுத்துவது நல்ல பலன்களைப் பெற உதவும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சி தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தங்களின் இலக்குகளை அடைவதிலும் வெற்றி பெறுவார்கள்.
புதிய வருமான வழிகள் உருவாகும். மன உறுதியும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகளும் சிறப்பாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவதுடன், ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |