Viral Video: மீனை தட்டிப்பறிக்க வந்த கழுகு! தலைதெறிக்க ஓட வைத்த தருணம்
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி சாப்பிட வைத்திருந்த நிலையில், மற்றொரு கழுகு அந்த உணவை தட்டிப் பறிப்பதற்கு, சண்டையிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது.
மீனுக்கு சண்டையிட்ட இரண்டு கழுகுகள்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில், கழுகு ஒன்று மீனை வேட்டையாடி அதனை சாப்பிடுவதற்கு தயார் ஆகியுள்ளது. அத்தருணத்தில் மற்றொரு கழுகு அந்த மீனுக்காக சண்டையிட்டுள்ளது.
இந்த சண்டையில் பார்வையாளர்களின் யோசனை எந்த கழுகு மீனை தனக்கு உணவாக்கும் என்பதாகவே இருந்துள்ளது. ஆனாலும் ஒரு வழியாக தட்டிப்பறிக்க வந்த கழுகை தலைதெறிக்க ஓட வைத்துள்ளது வேட்டையாடிய கழுகு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
