Viral Video: ராட்சத மீனை வேட்டையாடிய கழுகின் பரிதாப நிலை... அச்சச்சோ இப்படி ஆகிடுச்சே!
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ள நிலையில், கடைசி நேரத்தில் மீனை பரிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கழுகின் பரிதாபநிலை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
இங்கும் கழுகு ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. ஆனால் வேட்டையாடிய மீனை வைத்துக் கொண்டு உயர பறக்க முடியாமல் தவித்த கழுகு இரண்டாவது முறையாகவும் முயற்சித்துள்ளது.
ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஆம் கழுகிடம் பிடிபட்ட ராட்சத மீன் சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
