Viral Video: கழுகின் பிரமிக்க வைத்த மீன் வேட்டை... வானில் பறந்த அட்டகாசமான காட்சி
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை தனது பசிக்கு வேட்டையாடி எடுத்து செல்லும் நிலையில், குறித்த மீனின் போராட்டம் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் பல காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

எத்தனை தான் புதிய புதிய காட்சிகளை பார்த்தாலும், சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது. இங்கும் கழுகு ஒன்று பெரிய மீனை வேட்டையாடி வானில் பறந்து செல்கின்றது.
தனது சக்திக்கு அது மிகப்பெரிய மீனாக இருந்தாலும், ஆரம்பத்தில் தனது ஒற்றைக்காலில் வைத்து தான் தனது பயணத்தை தொடர்ந்துள்ளது. பின்பு ஒரு கட்டத்தில் தனது மற்றொரு காலையும் பயன்படுத்தி மீனை பிடித்துக் கொண்டது.
மிகவும் துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ள இக்காட்சியானது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |