கடலுக்குள் மூழ்கிய கழுகு: ராட்சத மீனை பிடித்து செல்லும் திரில் காட்சி
உயரே பறந்த கழுகு ஒன்று கடலுக்குள் மூழ்கி பெரிய மீன் ஒன்றினை பிடித்துச் செல்லும் திரில் காட்சி காண்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோ கழுகு ஒன்று, நடு வானில் இருந்து பறந்து வந்து வேட்டையாடுவதை பார்ப்பதால் வியப்பு மேலிடும்.
கழுகு தோட்டா பாயும் வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்தது. கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்பார்கள். அதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், கழுகு கடலுக்கு மேல் பறப்பதைக் காணலாம், அப்போது அதன் கண்கள் தண்ணீரில் பல மீட்டர் கீழே தண்ணீரில் இருந்த மீன் மீது விழுந்தன.
அடுத்த நொடியே, நாம் பார்க்கும் காட்சி நம்மை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும். உண்மையில், இரையைப் பார்த்த கழுகு, தோட்டாவின் வேகத்தில் தண்ணீரில் பல அடிகள் கீழே சென்று, நொடியில், மீனை தன் கால்களில் பிடித்துக் கொண்டு மேலே வந்தது. கழுகு எடை மிகுந்த மீனை சுமந்து கொண்டு காற்றில் பறந்ததைக் காணலாம்.