கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமான பிரச்சனையை எப்படி தீர்ப்பது?
கர்ப்ப காலம் என்பது திருமணமாகிய எல்லா பெண்களும் எதிர்கொள்ளும் ஒரு நிலை. இந்த நேரததில் உடல் நிலை ஒரு மாற்றத்திற்கு வரும்.
பொதுவாக குழந்தை பெற்றறெடுப்பது ஒரு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த நோரத்தில் பெண்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். அதில் இந்த செரிமானப்பிரச்சனையும ஒன்று.
இந்த செரிமானப்பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்ற வழிமுறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்ப காலம்
இந்த காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இதனால் குமட்டல் வாந்தி நெஞ்சரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். அடிவயிற்றில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ஹார்மோன் சமநிலையின்மை, உணவில் மாற்றம் மற்றும் பலவற்றை உண்டாக்குகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களை பின்பற்ற முடியும். கர்ப்பிணி பெண்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டாலும் பெரும்பாலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிக்குள்ளாவார்கள்.
இதன் காரணமாக வாயு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. செரிமான ஆரோக்கியத்தை சிறந்த முறையில் வைப்பதற்கு நீங்கள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
முழு தானியங்கள், பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றபோன்ற உணவுகள் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்றவற்றை தரும். இதை தவிர நார்ச்சத்தை உடலுக்கு அளித்து நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
நல்ல உணவு மட்டுமல்லாமல் நீங்கள் நாள் முழுவதும் போதுமான அளவு திரவங்கள், குறிப்பாக தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
உங்களின் வயிறு கர்ப்ப காலத்தில் அதிக அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். மேலும் தூண்டுதல் ஏற்படுத்தக்கூடிய உணவுகளுக்கு உணர்த்திறனை உண்டாக்கும்.
எனவே நீங்கள் ஒரே நேரத்தில் அதிக உணவை சாப்பிடும் பொழுது அது உங்களுடைய வயிறு மற்றும் குடல் பகுதியில் அழுத்தத்தை உண்டாக்கும். இது ஆரம்பகால கர்ப்பகால அபாயத்தை உண்டாக்குகிறது.
ஆகையால் செரிமான பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க வழக்கமான இடைவெளியில் சிறிய அளவிலான உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்கள் உடலின் சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கவும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை தொடர்ச்சியாக அளிக்கவும் உதவுகிறது.
உங்களின் வயிறு கர்ப்ப காலத்தில் அதிக அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். மேலும் தூண்டுதல் ஏற்படுத்தக்கூடிய உணவுகளுக்கு உணர்த்திறனை உண்டாக்கும்.
எனவே நீங்கள் ஒரே நேரத்தில் அதிக உணவை சாப்பிடும் பொழுது அது உங்களுடைய வயிறு மற்றும் குடல் பகுதியில் அழுத்தத்தை உண்டாக்கும். இது ஆரம்பகால கர்ப்பகால அபாயத்தை உண்டாக்குகிறது.
ஆகையால் செரிமான பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க வழக்கமான இடைவெளியில் சிறிய அளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும். இது உங்கள் உடலின் சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கவும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை தொடர்ச்சியாக அளிக்கவும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |