ஸ்டாலினுடன் டெல்லி சென்ற துர்கா ஸ்டாலின்: என்ன காரணம்?
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியை சுமார் 25 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார்.
நீட் தேர்வு, எழுவர் விடுதலை உட்பட முக்கியமான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து திமுக தரப்பில் வெளியான விளக்கத்தில், முதல்வர் ஆனதிலிருந்து ஸ்டாலின் சரியாக தன்னுடைய உடல்நலனை கவனித்துக் கொள்வதில்லை.
சரியாக சாப்பிடுவதும் இல்லை, எப்போதுமே தமிழக மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே அவரை கவனித்துக் கொள்ள துர்கா ஸ்டாலின் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.