முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்... முதல் வார்த்தையிலேயே கண்கலங்கிய மனைவி
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது அவரது மனைவி, கண்கலங்கியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். இந்த விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.
இதில் எதிர்கட்சி சார்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ்-ம் அவருடன் தனபால் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜக சார்பில் இல.கணேசன் பங்கேற்றனர். மறுபுறம் ஸ்டாலின் குடும்பத்தார் அமரவைக்கப்பட்டனர். சுமார் 500 பேர் வரை விழாவில் பங்கேற்றனர்.
காலை 8.45 மணிக்குத் தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு இலச்சினையுடன் கூடிய காரில் ஏறி ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் கிளம்பி வந்த ஸ்டாலின் 8.55க்கு மேடைக்கு வந்து, சரியாக 9மணிக்கு மேல் பதவி ஏற்றுள்ளார்.
ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காத வண்ணம் கண்களை துடைத்துக் கொண்டதோடு, அவரது அருகில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினும் கண்கலங்கினார்.