முகத்திற்கு ஐஸ் கட்டி தடவினால் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே!
தினமும் காலையில் எழுந்தவுடன் நமது முகம் இயற்கையாக இருக்கும். இந்த நேரத்தில் சில ஐஸ் கட்டிகளை எடுத்து முகத்திற்கு மசாஜ் செய்து வருதல் மிகவும் நல்லது.
மேலும் அன்றய நாள் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். முகத்தை உறுதியாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க இந்த ஐஸ் கட்டிகள் மிகவும் உதவியாக இருக்கிறது.
இந்த ஐஸ் கட்டிகளை முகத்திற்கு பயன்படுத்தும் போது என்ன நன்மைகளை தருகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐஸ் மசாஜ்
1. ஐஸ் நீரின் காணப்படும் குளிர், ரத்த நாளங்களை சுருக்குகிறது. அதனால் முகத்தில் காணப்படும் வீக்கம் குறைகிறது. காலையில் எழுந்தவுடன் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்கும்.
நாம் காலையில் எழும் போது சோர்வாக இருந்தால் இந்த ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்திற்கு மசாஜ் கொடுக்கும் போது மிகவும் உற்சாகமாக நீங்கள் உணர்வீர்கள்.
2. உங்களது முகத்தில் துளைகள் பெரிதாக இருந்தால் இந்த ஐஸ் கட்டிகளை முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் உள்ள துளைகளை இது இறுக்கும்.
அதனால் உங்கள் சருமம் துய்மையாகவும் சுத்திகரிக்கப்பட்ட தோற்றத்துடனும் காணப்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் இதை செய்து பார்க்கலாம்.
3. ஐஸ் மசாஜ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளான சரும சிவத்தல், சரும எரிச்சல் என்பவற்றை குறைக்கிறது.
நீங்கள் வெயிலிலிருந்து வந்தவுடன் இந்த ஐஸ் மசாஜ் செய்தால் அது உங்களுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
4. இது நிணநீர் வடிகாலை தூண்டுகிறது. தோலிலிருந்து நச்சுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை அகற்ற உதவுகிறது. இது நாளடைவில் ஒரு தெளிவான, பிரகாசமான நிறத்தை பெற உதவியாக இருக்கும்.
5. தோல் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் மேம்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |