7 வருடமாக சிக்காமல் இருந்த திருடன்! தானாக போலீசாரிடம் சிக்கிய வேடிக்கை; எப்படி தெரியுமா?
பல வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர், தானாக வந்து சிக்கிகொண்ட சம்பவம் தென் ஆப்ரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் Dumbest Criminal என கடந்த 7 வருடங்களாக தேடப்பட்டு வந்த தாமஸ் கோபோ என்ற நபர் தானாக சென்று காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார்.
இவர், ஏற்கனவே 91,000 ரூபாய் மதிப்புள்ள ஹார்ட்வேர் பொருட்களை திருடிய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்தவர்.
இந்நிலையில், அவர் தான் விண்ணப்பித்த போலீஸ் வேலை குறித்து தெரிந்துகொள்வதற்காக' காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

அப்போது, தான் அவர் தேடுதல் பட்டியலில் இருக்கும் ஓஎர் முக்கிய குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது.
பல நாள் ஒரு திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல், கையுங்களவுமாக சிக்கி இருக்கிறார்.
சிறைக்காவலில் வைத்திருந்த இவரை, விரைவில் இவரது குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.