துல்கர் சல்மானுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா? வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகனான இவர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘செக்கண்டு சோவ்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, சீதா ராமம், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவருக்கென தனி பெண்கள் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இந்த படத்துக்கு பின்னர் துல்கர் சல்மான் தற்பொழுது I'm Game என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நஹஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் சூதாட்டம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மான் அவரின் மனைவி அமல் சூபியா மற்றும் அவரது 8வயது மகள் மரியம் அமீரா சல்மான் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகை்கபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
துல்கர் சல்மான் மகளின் பிறந்த நாளை கொண்டாடி குறித்த புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
