ட்ரெண்டிங் பாடலை பல பிரபல பாடகிகளின் குரலில் பாடி அசத்திய பாடகி! படு வைரலாகும் காணொளி
பாடகி சஞ்சனா கல்மஞ்சே தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஊரும் பிளட் பாடலை பல பிரபல பாடகிகளின் குரல்களில் பாடி அசத்திய காணொளி இணையதத்தில் படு வைரலாகி வருகின்றது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அண்மையில் வெளியாகி வசூலை குவித்து வரும் "டியூட்" படத்தின் "ஊரும் பிளட்" பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெட்டிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்த ஊரும் பிளட்.. பாடலை சாய் அபியங்கர் மற்றும் பால் டப்பா ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த பாடல் அண்மைகாலமாக எல்லோராலும் முனுமுனுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் குறித்த பாடலை பாடகி சஞ்சனா கல்மஞ்சே பிரபல பாடகிகளின் குரல்களில் பாடியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |