கையில் பெரியார் சிலை.. முதல்வர் கூறுவதை க்யூட்டாக கேட்கும் 5வயது சிறுவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெரியார் குறித்துக் கூறுவதை க்யூட்டாக கேட்கும் 5 வயது சிறுவனின் புகைப்படம் ட்விட்டரில் வைரலானது.
இந்தப் படத்தை திமுக இளைஞரணி செயலரும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
அவர் பகிர்ந்த சற்று நேரத்திலேயே முதல்வர் கூறுவதை ஆர்வமாகக் கேட்கும் அந்த சிறுவனின் புகைப்படம் வைரலானது. அந்தப் படத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது கையில் பெரியார் சிலையை வைத்திருக்கிறார்.

பெரியார் குறித்து முதல்வர் கூறுவதை க்யூட்டாக அந்த சிறுவன் கேட்கிறான். கொளத்தூரைச் சேர்ந்த டாக்டர் பார்த்தசாரதி- டாக்டர் கலையரசி தம்பதியின் மகன் அந்த படத்தில் இருக்கும் சிறுவன்.
5 வயதே ஆகும் சாய் சித்தார்த் 928 Colour Cubes-ஐ கொண்டு முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இதற்காகவே முதல்வர் ஸ்டாலின் அந்தச் சிறுவனை நேரில் அழைத்து நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக சாய் சித்தார்த்கை திமுக இளைஞரணி செயலர் உதயநிதியும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், அச்சிறுவனுக்கு சிறிய கோப்பை ஒன்றையும் அளித்து உற்சாகப்படுத்தியுள்ளார் உதயநிதி.