சத்துக்களை அள்ளித்தரும் Dry Fruitsல் பணியாரம் செய்வது எப்படி? தீபாவளி ஸ்பெஷல்
உலகத்தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் விதவிதமான பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழமையான ஒன்றே.
இதற்காக பலரும் வித்தியாசமான முறையில் இனிப்புகளை செய்து அசத்த எண்ணுவார்கள், அவர்களுக்கான சூப்பரான ரெசிபி தான் Dry Fruits பணியாரம்.
இதற்கு தேவையான பொருட்கள்
அரிசி - 100 கிராம்
உளுந்து- 100 கிராம்
பேரீட்சை- 10
பாதாம்- 10
பிஸ்தா- 10
முந்திரி- 10
செய்முறை
முதலில் அரிசியையும் உளுந்தையும் நன்றாக கழுவிட்டு இரண்டு மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பேரீட்சை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியையும் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
அரிசி, உளுந்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும், இதேபோல் நட்ஸ்களையும் அரைத்து எடுக்கவும்.
இதனை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும், பணியாரக்கல்லில் தேவையான அளவு நெய் சேர்த்து மாவை ஊற்றி எடுத்தால் சுவையான Dry Fruits பணியாரம் தயார்!!!