உலர் கண் நோய் ஏற்பட இதெல்லாம் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே உடல் உறுப்புகளுள் கண்கள் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. நம் உடலை நாமே பார்த்து பராமரிக்க வேண்டுமானாலும் சரி நாம் இந்த உலகை பார்க்க வேண்டுமானாலும் சரி கண்கள் இருந்தால் தான் இது சாத்தியம்.
எனவே கண்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களில் ஏற்படும் பலவிதமான நோய்களுள் உலர் கண் என்பது முக்கிய இடம் வகிக்கின்றது. இது தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கண் உராய்வின் போது போதுமான அளவு கண்ணீர் அல்லது பராமரிப்பு இல்லாத போது ஏற்படக் கூடிய ஒரு நோய் நிலைமையே உலர் கண் நோயாகும்.இவை கண்களை எரிய செய்யும் மற்றும் சங்கடமான நிலையை உருவாக்கும்.
உலர் கண் ஏற்பட காரணங்கள்
நீண்ட நேரம் உற்றுப் பார்த்தல், கணினி, மொபைல் போன்களின் பயன்பாடு, அதிக நேரம் காற்றில் இருத்தல் போன்றவை உலர் கண் ஏற்பட பிரதான காரணமாக அமைகின்றது. குறிப்பாக மாதவிடாய் பிரச்சினைகள் பெண்கள் உலர் கண்களால் அதிகம் பாதிக்கப்பட காரணமாகின்றது.
சர்க்கரை நோய், தைராய்டு கோளாறுகள் மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளும் கண் வறட்சிக்கு காரணமாக இருக்கலாம்.
லேசர் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தற்காலிகமாக சில காலங்களுக்கு கண்கள் உலரும் தன்மை காணப்படக்கூடும்.
வீக்கம் அல்லது கதிர்வீச்சினால் கண்ணீர் சுரப்பி சேதம் ஸ்ஜோகிரென்ஸ் சிண்ட்ரோம், முடக்கு வாதம் மற்றும் கொலாஜன் வாஸ்குலர் நோய்கள் போன்றன கண்ணீரை உருவாக்கும் திறனை பாதிக்கும் இதனால் உலர் கண் நோய் ஏற்படுகின்றது.
பெருநகரங்களில் உள்ள மக்கள், ஒப்பீட்டளவில் குறைந்த காற்று மாசுபாடு உள்ள மற்ற நகரங்களை விட உலர் கண் நோய்க்குறியால் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் சில மடங்கு அதிகம்.
இந்த நிலை தொடரும் போது மருத்துவரை அணுக வேண்டும். கண்கள் உலர் பிரச்சினைக்கு சிகிச்சையானது கண்களில் ஈரப்பதத்தை தக்க வைக்க மருந்து விடுதல் போன்று எளிமையானதாகவே இருக்கும்.
நாள்பட்ட பிரச்சனையாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் கண் இமைகளின் மூலையில் உள்ள வடிகால் ஓட்டையை அடைத்து கண்களில் நீரை தக்க வைக்க செய்ய வேண்டும்.
இப்பிரச்சினை எளிமையாக தீர்வு காணக் கூடியது தான். எனவே முதற்கட்ட அறிகுறிகளின் போதே இதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |