பாதாமை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?
பல சத்துக்களைக் கொண்ட பாதாமை ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாதாம்
உடம்பிற்கு கேடு விளைவிக்காத ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று தான் பாதாம். இவற்றினை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் முழுமையான சத்துக்கள் கிடைக்கின்றது.
பாதாமில் வைட்டமின் ஈ, மாக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், பாஸ்பரஸ் உள்பட பல சத்துகள் அடங்கியுள்ளதுடன், உடல் எடையை குறைக்கவும், உடம்பிற்கு வலு சேர்த்து, மனநிலையை மேம்படுத்தவும், இதய நோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கின்றது.
பாதாம் சாப்பிடும் பெண்களை மார்பக புற்றுநோய் தாக்குவதற்கான சாத்திய கூறுகள் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊறவைத்த பாதாமில் நன்மைகள்:
இரவில் 4 அல்லது 5 பாதாமை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தோல் நீக்கி சாப்பிட்டால் முழு ஊட்டச்சத்து கிடைக்கும்.
ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் புரத சத்துக்கள் உடம்பிற்கு வலு கொடுப்பதுடன், பிற உணவுகளில் இருக்கும் புரதத்தையும் ஏற்றுக்கொள்ள உடலை தயார் செய்கின்றது.
ஊற வைத்த பாதாம் ஜீரண பிரச்சினையிலிருந்து தவிர்க்கின்றது. எளிதில் ரெிமான ஆவதுடன், வயிறு நிரம்பிய உணர்வையும் அளிக்கின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஊற வைத்த பாதாமில் Monounsaturated fats எனும் நிறைவுற்ற கொழுப்பு சத்து உள்ளது. எனவே, இது இருதய நலனுக்கும் உறுதியளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |