பாம்பிற்கு முத்தம் கொடுத்த நபர்! பரிதாபமாக உயிர்பிரிந்த சோகம்
போதையில் பாம்பை பிடித்து முத்தம் கொடுத்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் நபர்
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் கோவிந்த்பூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் யாதவ். இவர் மதுவருந்திவிட்டு போதையில் விஷப்பாம்பை கையில் பிடித்து விளையாடியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் பாம்பை கீழே விடுமாறு கெஞ்சியும் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் பாம்பை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டே இருந்தார்.
பாம்புடன் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று கடவுளிடம் மன்னிப்பு கேட்பதுபோன்று வணங்கியும் உள்ளார்.
பின்பு பாம்பை கழுத்தில் போட்டுகொண்டு நடனம் ஆடியபடியே கோவிலில் இருந்து திரும்பிய அவர், பாம்புக்கு முத்தமிட்டு அதனை கீழே விட்டுள்ளார்.
கீழே விட்டதும் பாம்பு மறைந்து கொண்ட நிலையில், சிறிது நேரத்தில் குறித்த நபர் மயக்கம் அடைந்துள்ளார்.
அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
Nawada viral video | पूर्ण शराबबंदी की हकीकत देखिए ... साँप से खेलता शराबी #Nawada #नवादा
— kuldeep Bhardwaj (@krisbhardwaj) March 4, 2023
वीडियो में दिख रहा ये शख्स शराब के नशे में सांप के साथ खेल रहा है. कभी गले में लपेटकर तो कभी हाथों में पकड़कर नचा रहा. नतीजा सांप ने डंसा और शख्स की मौत हो गई. pic.twitter.com/ZLimfW6rRm