Viral Video: படமெடுத்து எதிர்த்து நிற்கும் பாம்பு... மதுபோதையில் நபர் செய்த காரியம்
குடிபோதையில் உள்ள நபர் ஒருவர் நல்லபாம்பு ஒன்று படமெடுத்து எதிர்த்து நிற்கும் நிலையில், அதனை அடுத்தடுத்து சீண்டிய காட்சி வைரலாகி வருகின்றது.
படமெடுத்த பாம்பிடம் நபர் செய்யும் சேட்டை
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.

சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைப்பவர்கள். இங்கும் நபர் ஒருவர் குடிபோதையில் படமெடுத்த பாம்பை பிடித்து கெத்து காட்டியுள்ளார்.
பாம்பும் தனது கோபத்தினை ஆக்ரோஷமாக வெளிக்காட்டிய நிலையில், நபர் மீண்டும் மீண்டும் குறித்த பாம்பை சீண்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |