நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்... பின்பு நடந்தது என்ன?
நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னை நள்ளிரவில் குடிகாரன் ஒருவர் தலையில் பலமான தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகியதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இந்தியில் அட்லீ தயாரிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் முதன்முதலாக நடித்து வருகின்றார். வருண் தவான் நாயகனாக நடிக்கும் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
மேலும் பல படங்களை தனது கைவசம் வைத்திருக்கும் இவர், சைரன் பட புரமோஷனில் பிசியாக இருந்து வரும் நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
நள்ளிரவில் தாக்கிய குடிகாரன்
கீர்த்தி சுரேஷ் ஒருநாள் சாலையில், தனது தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, குடிபோதையில் வாலிபர் ஒருவர் கை போட்டுள்ளார்.
இதனால் கோபமான கீர்த்தி அந்நபரின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைவிட்டு சென்றுள்ளார். பின்பு சிறிது தூரம் சென்ற போது, கீர்த்தியின் தலையில் பலத்த அடி விழுந்துள்ளது.
என்ன நடந்தது என்று தெரியாத அளவிற்கு சில நொடிகள் நின்ற கீர்த்தி பின்பு திரும்பி பார்த்த போது, குடிகாரன் தன்னை தலையில் தாக்கிவிட்டு ஓடியதை பார்த்துள்ளார்.
உடனே தனது தோழியுடன் சேர்ந்து அந்த குடிகாரனை விரட்டி பிடித்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் நடந்ததை கூறிஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றாராம்” அவர் சொன்ன இந்த கதையை கேட்டு கீர்த்தியின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |