தலைமுடிக்கு முருங்கை கீரை ஹேர் மாஸ்க் - இதை போட்டால் என்ன நடக்கும்?
முருங்கை கீரையை அரைத்து அதை அப்படியே தலையில் பூச வேண்டும் அப்படி செய்தால் தலைமுடிக்கு என்ன பலன் என்பதை பதிவில் பார்க்கலாம்.
முருங்கை கீரை ஹேர் பெக்
அடிக்கடி வெளியில் சென்று வருபவர்களுக்கு தலைமுடி வறட்சி, பொடுகு மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் தலையில் ரத்த ஓட்டமின்மை மற்றும் உச்சந்தலையில் ஈரப்பதமின்மையாகும்.
இதை சரி செய்ய மக்கள் பலவாறு முயற்சி செய்கின்றனர். ஆனால் அவை தலைமுடியை இன்னும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும்.
அந்த வகையில் இதை சரி செய்ய முருங்கை கீரை மிகவும் சிறந்த பொருள் எனப்படுகின்றது. அதன்படி முருங்கை கீரை பேஸ் பெக் எப்படிசெய்யலாம் என்பயும் அதன் பயன்களையும் பார்க்கலாம்.

ஹேர் பெக் தயாரிக்கும் முறை
முருங்கை ஹேர் மாஸ்க் தயாரிக்க புதிய முருங்கை கீரைகள் – 1 கப் தண்ணீர் – 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன் (தேவையென்றால்) போன்ற பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் முருங்கை கீரைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். தலை அதிகம் வறட்சியாக இருந்தால், அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த விழுதை உச்சந்தலையிலும், முடியின் வேர்களிலும் நன்றாகத் தடவவும். 2-3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிடவும்.முதலில் சாதாரண நீரில் அலசி, பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி கழுவவும். குளிர்காலத்தில் வாரம் ஒருமுறை இதைச் செய்து வரலாம்.

சாப்பிடாமல் இதை தலையில் தடவுவதன் நன்மைகள்
நேரடி ஊட்டச்சத்து: செரிமானத்திற்காகக் காத்திருக்காமல், சத்துக்கள் நேரடியாக வேர்களுக்குச் செல்கின்றன.
வேகமான செயல்பாடு: இரும்புச்சத்து மற்றும் அமினோ ஆசிட்கள் முடி வளரும் இடத்தில் நேரடியாக வேலை செய்கின்றன.
ஈரப்பதம்: தலையின் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்வதோடு, பொடுகு வராமல் தடுக்கிறது.
சத்துக்கள் வீணாகாது: உணவாக எடுத்துக் கொள்ளும்போது சில சத்துக்கள் செரிமானத்தின் போது வீணாகலாம், ஆனால் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தும்போது முழுப்பலனும் கிடைக்கும்.
நேரடித் தீர்வு: குளிர்கால முடி பிரச்சனைகள் பெரும்பாலும் உச்சந்தலை சார்ந்தது என்பதால், முருங்கை விழுது ஒரு சிறந்த 'ஸ்பாட் ட்ரீட்மென்ட்' போலச் செயல்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |