உடம்பில் ரத்தத்தின் அளவை கிடு கிடுவென அதிகரிக்கும் ஆம்லேட்: எவ்வாறு தயார் செய்வது?
omelette
drumstick leaf
By Manchu
முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது 2 முறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து வேறில்லை.
தேவையான பொருட்கள்
- முருங்கைக் கீரை - ஒரு கப்
- முட்டை - 3
- வெங்காயம் - ஒன்று
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லித் தழை - சிறிது
- சீரகம் - கால் தேக்கரண்டி
செய்முறை
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
- தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.
- ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.
- வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுத்து சாப்பிட முருங்கைக் கீரை ஆம்லெட் தயார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US