Drumstick Leaves Soup:மழைக்கால நோய்களை அடித்து விரட்டும் முருங்கை இலை சூப் சுவையாக எப்படி செய்வது?
பொதுவாக மழைக்காலங்களில் நோய்கள் வருவது சாதாரண விஷயம் தான். இதை அதிகரிக்கச்செய்யாமல் ஆரொக்கியமான முறையில் சுகப்படுத்த ஆரோக்கியமான உணவுகள் உதவும்.
முருங்கை இலைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஏராளமான நன்மைகள் கொண்டள்ளனஹ.
இந்த இலைகள் அவற்றின் பல்திறன் காரணமாக பல்வேறு வழிகளில் இந்திய உணவு வகைகளில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, முருங்கை இலைகளை வறுத்து, மற்ற காய்கறிகளுடன் கலந்து உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கச் செய்கின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் வரும் நோய்களுக்கு மருந்தாக எப்படி முருங்கை இலை சூப் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை - 1 1/2 கப்
- அரிசி வேக வைத்த தண்ணீர் - 2 கப்
- சாம்பார் வெங்காய்ம் - 5
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- தேங்காய் பால் - 1 கப்
- சீரகம் - 1 tsp மிளகு - 1/2 tsp
- உப்பு - தே.அ
செய்முறை
முதலில் அரிசி வேக வைத்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள். இது நன்கு கொதிக்கும்போது சுத்தம் செய்த முருங்கை இலைகளை சேர்த்து கலந்துவிடவும்.
சிறிதி நேரம் கழித்து பின்னர் வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் சேர்க்கவும். பின் தட்டுப்போட்டு மூடி சிறு தீயில் முருங்கை இலை வேகும் வரை கொதிக்கவிடவும். பின்னர் முருங்கைக்கீரை வெந்ததும் தேங்காய் பால் கொஞ்சம் இடித்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து , தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பின்னர் தாளிக்க அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் அதில் கொட்டவும். இப்படி செய்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான முருங்கையிலை சூப் தயார்.
இதை மழைக்காலங்களில் வீட்டில் வைத்து குடித்தால் சளி காய்ச்சல் இருமல் போன்னவற்றை இல்லாமல் செய்வதுடன் பல நன்மைகளை நமக்கு தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |