விமான நிலையத்தில் டிரம்ஸ் சிவமணி செய்த காரியம்.. நெகிழ்ச்சி தெரிவித்த பயணிகள்
விமான நிலையத்தில் டிரம்ஸ் சிவமணி செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமிபக்காலமாக இந்தியாவில் விமானம் மற்றும் ரயில் சேவையில் அதிக தாமதம் ஏற்படுகின்றது. இதனால் பயணிகள் சேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கிய பின்னர் அவர்களின் லக்கேஜ் வருவதற்கு 40 நிமிடங்கள் தாமதமாகி உள்ளது.
இதனால் பயணிகள் என்ன செய்வது? என புலம்பிய நிலையில் பயணிகளில் ஒருவராக இருந்த டிரம்ஸ் சிவமணி அங்கிருந்த இடத்தில் டிரம்ஸ் வாசித்து பயணிகளை உற்சாகப்படுத்தி உள்ளார்.

டிரம்ஸ் சிவமணி என்பவர் ஏஆர். ரஹ்மான் இசையில் வெளியான பல தமிழ் படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்து பிரபலமானவர்.
வைரல் காட்சி
இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்த பம்பாய் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த "அந்த அரபிக் கடலோரம்" பாடலில் இடம்பெறும் "ஹம்ம ஹம்ம ஹம்மா" பாடலை டிரம்ஸ் சிவமணி வாசித்துள்ளார்.
இவர் இப்படி பயணிகளை என்டர்டைம் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
It’s been 40 minutes since we landed at Kochi airport and we are still waiting for our bags to come out. Instead of getting agitated we are getting entertained by a fellow passenger. pic.twitter.com/DJXe3rjFZZ
— Sheetal Mehta (@SheetalMehta) January 17, 2024
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |