முருங்கை கீரையை வீட்டின் முன்பு வளர்க்கக்கூடாது ஏன்? உண்மை காரணம் இதோ
முருங்கை ஒரு மூலிகை மரத்தை போன்றது. இதன் இலைகளில் இருந்து காய் வரை அனைத்தும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.
அதுவும் ஆண்மையை தூண்டிவிடுவதில் முருங்கைக்கு இணை இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. நமக்கு இத்தனை நன்மைகளை வழங்கும் முருங்கை மரத்தை வீட்டின் முன் புறங்களில் வளர்க்கக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்ல காரணம் என்ன?
முருங்கை மரத்தின் வேர் வீட்டின் அஸ்திவாரத்தை பதம்பார்க்கும் தன்மை கொண்டது. அதேபோல லேசான காற்று அடித்தாலும் முருங்கை உடைந்து விழுந்து விடும். சொந்த பந்தங்கள் யாராவது வீட்டுக்கு வந்தவுடன் வீட்டின் முன்புறத்தில் இந்த மரத்தை பார்த்தால் சிலர் அபசகுணமாக நினைப்பார்கள்.
குளிர் காலங்களில் இந்த முருங்கை மரத்தில் நிறைய கம்பளிப் பூச்சிகள் உருவாகும். வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தாலோ அல்லது துணி வீட்டின் வெளியே காயவைத்திருந்தாலோ அந்த கம்பளி பூச்சிகள் சட்டைக்குள் ஏறிவிடும்.
இதனால் தான் வீட்டின் முன்புறங்களில் முருங்கை மரத்தை வைக்கக்கூடாது என்று நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி முருங்கை மரத்தில் பேய் இருக்கும் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை தான்.
உங்களுக்கு முருங்கை மரம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் வீட்டின் பின்புறத்தில் வைத்துக் கொள்ளலாம்.