நடுரோட்டில் அமர்ந்திருந்த குழந்தை... வேகமாக வந்த லாரி! பதபதைக்க வைத்த காட்சி
குழந்தை ஒன்று நடுரோட்டிற்கு ஓடிவந்து உட்கார்ந்திருந்த தருணத்தில் இரு திசைகளிலிருந்து வந்த லாரி டிரைவர் சுதாரித்துக் கொண்டதில் குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். வீட்டில் இருக்கும் சுட்டிக்குழந்தைகள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் பின்னே ஓடி அவர்களைப் பாதுகாப்பது என்பது பெரியவர்களுக்கு சற்று கடினமானவே இருக்கும்.
இந்நிலையில் குழந்தை ஒன்று வீட்டைவிட்டு ஓடிவந்து நடுரோட்டில் அமர்ந்து கொண்ட நிலையில், எதிரே வந்த சாரதி வண்டியை நிறுத்தியுள்ளார். பின்பு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் குழந்தையை தூக்கி அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துள்ளார். அதன்பின்பே குழந்தையின் தாய் வந்து குழந்தையை வாங்கியுள்ளார்.
இக்காட்சி பழைய காட்சியாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கும் தாய், தந்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டே ஆகும்.