வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா? அப்ப இத வெறும் வயித்துல குடிங்க!
ஒருவரது மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலம் சிறப்பாக இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தை எளிதில் அடைய உதவும்.
எனவே நீங்கள் உங்களின் அதிகப்படியான எடை மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க நினைத்தால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களை அன்றாடம் குடித்து வாருங்கள்.
ஒருவேளை உங்களால் எடையைக் குறைக்க கடுமையான டயட்டை பின்பற்ற முடியாவிட்டால், அன்றாட உடற்பயிற்சியுடன் பின்வரும் பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, உடல் எடையும் விரைவில் குறையும்.
வெட்டிவேர் நீர்
வெட்டிவேர் குளிர்ச்சியான பண்புகளுக்கு பெயர் போனது. இத்தகைய வெட்டிவேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதனால் இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, நரம்பு தளர்வு , தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் இது சருமத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.
குறிப்பாக உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
கொத்தமல்லி நீர்
கொத்தமல்லி விதைகளானது செரிமான நொதிகள் மற்றும் அமிலங்களை தூண்டிவிட்டு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
அதோடு இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களான, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்றவையும் அதிகம் உள்ளது.
இப்படிப்பட்ட மல்லி விதையை இரவு தூங்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, இரவு முழுவதும் நீரில் வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நிச்சயம் காணலாம்.
சீரகம்-எலுமிச்சை
நீர் சீரகம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.
அப்படிப்பட்ட சீரக விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பானதும் எலுமிச்சை சாறு பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மஞ்சள் நீர்
மஞ்சள் மருத்துவ குணமிக்க ஒரு அற்புதமான மசாலாப் பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், தெர்மோஜெனிக் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
இப்படிப்பட்ட மஞ்சள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதற்கு சுடுநீரில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதனால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.