30 நாளைக்கு டீ குடிக்காமல் இருந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன?
பொதுவாகவே நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காமல் பொழுதே போகாது. ஒரு டீ கொடுத்தாலும் அதை ரசித்து ருசித்து குடிப்பார்கள். சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ஆனால் ஒரு நாளைக்கு டீ இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.
காலை எழுந்ததிலிருந்து இரவு தூக்க செல்லும் வரைக்கும் தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள டீ -யை அதிகம் அருந்துவார்கள். அவ்வாறு நாள் ஒன்றுக்கு அதிக டீ அருந்துவது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அவ்வாறு டீ குடிப்பதற்கு அடிமையானவர்கள் ஒரு மாதம் முழுவதும் டீ அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு மாதம் டீ அருந்தாமல்
ஒரு மாதம் டீ இருந்தாமல் இருந்தால் மண அழுத்தம், பதட்டம் மற்றும் மனசோர்வு என்பன குறையும்.
தினமும் டீ குடிப்பது உங்கள் தூக்க சுழற்சியை மாற்றி, அமைதியற்ற தூக்கம் மற்றும் பகல்நேர தூக்கத்தை ஏற்படுத்தும் அதனால் டீ குடிக்காமல் இருந்தால் சீரான தூக்கம் கிடைக்கும்.
தேநீர் மற்றும் காபி மற்றும் சோடா போன்ற பிற பானங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை மாற்றும். இது பின்னாளில் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் என்பவற்றை ஏற்படுத்தும் அதனால் டீ , காபி குடிப்பதை நிறுத்திவிட்டு ஆரோக்கியம் தருபவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.
காபி மற்றும் தேநீர் பற்களை கறைபடுத்தும். இந்த பானங்களில் அதிக அளவு டானின்கள் காணப்படுவதே இதற்குக் காரணம், இது பல் பற்சிப்பியை உருவாக்குதல் மற்றும் நிறமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இதனால் டீ , காபி குடிப்பதை வெகுவாக குறைப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |