டீ அருந்திய ஒன்றரை வயது குழந்தை பலி... குழப்பத்தில் பொலிசார்
ஒன்றரை வயது குழந்தை ஒன்று டீ அருந்திய பின்பு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் சிம்ரால் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைக்கு டீ கொடுத்த பின்பு தனது குழந்தை இறந்துவிட்டதாக தாய் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “ உயிரிழந்த குழந்தையின் தாய், சிம்ரோலில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குழந்தையின் தந்தை தற்போது ஜெயிலில் இருப்பதால், தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டீ கொடுத்த பிறகு குழந்தையின் மூச்சு நின்றுவிட்டதாக அவரின் தாய் கூறியுள்ளார்.
22 கி.மீ தொலைவில் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் இறப்பிற்கு சரியான காரணம் தெரியவில்லை என்பதால் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |