காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் இவ்வளவு நன்மையா?
காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உப்பு கலந்த நீர்
நமது உடம்பில் சரியான திரவ செயல்பாடு மற்றும் எலக்ரோலைட் அளவினை பராமரிப்பதற்கு சோடியம் அல்லது உப்பு கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆதலால் சிறிதளவு உப்பை கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம்.
காலையில் உப்பு கலந்த நீரை பருகுவதால், உடல் நீரேற்றமாக இருப்பதுடன், சரியான எலக்ட்ரோலைட் சமநிலையையும் பராமரிக்க உதவுமாம்.
மிதமாக உட்கொள்ளும் செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், செரிமான திரவங்களின் சுரப்பையும் அதிகரிக்கின்றது. மேலும் இது உணவு முறிவு மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவி செய்கின்றது.
இவை நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதுடன், உடம்பிலிருந்து வியர்வை மூலமும் நச்சு கலவைகளை வெளியேற்ற உதவுகின்றது.
உப்பு நீர் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை செயல்படுத்துகிறது, இது உடலின் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும்.
உப்பு நீரானது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. அதாவது தோலில் உப்பு நீரை தடவும் போது சருமத்தை உரிக்கவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுகின்றது.
உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், சளியை உடைக்கவும், வீக்கத்தை குறைக்கவும், அசௌகரியத்தை குறைக்கவும் உதவுகின்றது.
இது ஒட்டுமொத்த நுரையீரல் மற்றும் சுவாச செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், சளி, ஒவ்வாமை மற்றும் பிற சுவாச நோய்களுக்கான சாத்தியமான வீட்டு தீர்வாக அமைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |