80 வயதிலும் எலும்பு ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்...
கால்சியம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.
ஏனைய ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் நமக்கு மிகவும் தேவை. இவற்றை தினமும் உணவில் கட்டாயம் சேர்ததுக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படுகின்றது. எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாததாகிறது.
வயதாகும்போது மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகின்றது.
அதனை தவிர்த்துக்கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.எந்த உணவுகளில் கால்சியம் செறிந்து காணப்படுகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
கால்சியம் நிறைந்த உணவுகள்
பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்த கால்சியம் நிறைந்த உணவாக பசும் பால் காணப்படுகின்றது.
ஒரு கிளாஸ் பாலில் 314 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகின்றது. இது உங்கள் தினசரி கால்சிய தேவையில் 24 வீதத்தை பூர்த்திசெய்கின்றது.
8 அவுன்ஸ் முழு கொழுப்பு தயிரில் 488 மில்லிகிராம் கால்சியம் அடங்கியுள்ளது. புளிப்பு தயிரில் உள்ள லாக்டோபேசில்லஸ் நமது செரிமானத்திற்கு துணைப்புரிகின்றது.
டோஃபு - 1 கப் டோஃபுவில் 506 மி.கி கால்சியம் காணப்படுகின்றது.அதில் மிகக்குறைந்த அளவிலேயே கொழுப்பு காணப்படுகின்றது.மேலும் அதில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. இது எலும்புப்புரை நோயில் இருந்து பாதுகாப்பபு வழங்குகின்றது.
1 கப் பாதாமில் 385 மி.கி கால்சியம் காணப்படுகின்றது. மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மாக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை செறிந்து காணப்படுகின்றது.
சீஸில் புரதம், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிநைவாக காணப்படுகின்றது. 1.5 அவுன்ஸ் மொஸரெல்லா சீஸில் 333 மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. இதனை அதிகமாக சாப்பிடால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்பு காணப்படுகின்றது.
பருப்புகள், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பல்வேறு வகையான பருப்பு வகைகளில் அதிகளவில் கால்சியம் செறிந்து காணப்படுகின்றது.
ஒரு கப் சமைத்த பாசிப்பயறில் 270 மில்லிகிராம் வரையில் கால்சியம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுக்கொடுபதில் பருப்பு வகைகள் முக்கிய மூலமாக இருக்கின்றன.
ஒரு கப் கால்சியம் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் 347 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகின்றது. அதை பெற்றுக்கொள்வதும் மிகவும் எளிமையானது எனவே தினசரி கால்சியத்தின் தேவையை ஆரஞ்சு பழம் பூர்த்தி செய்கின்றது.
ஒரு கப் ஓட்ஸ் பாலில் 350 கிராம் கால்சியம் நிறைந்துள்ளது. பசும் பால் குடிக்க விரும்பாதவர்களின் கால்சிய தேவையை ஓட்ஸ் பால் சிறந்த முறையில் பூர்த்தி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |