சுடுதண்ணீருடன் தேன்: யாரெல்லாம் குடிக்கவே கூடாதுனு தெரியுமா?
சூடான தண்ணீரில் தேன் கலந்து யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேனில் சுடுதண்ணீர்
தேனில் சுடுதண்ணீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது என்று பலரும் இதனை பின்பற்றி வருகின்றனர். உண்மையில் இது உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
செரிமானம், எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற நன்மையை அளிக்கின்றது. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக செய்யலாம். மேலும் இதன் மூலம் உடம்பிலிருந்து நச்சுக்களும் வெளியேறுகின்றது.
ஆனால் இதனை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Image courtesy: Shutterstock
யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
நீரிழிவு நோயாளிகள் சுடுதண்ணீரில் தேன் கலந்து குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் தேனில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட இயற்கை இனிப்பு உள்ளதுடன், ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றது.
அசிடிட்டி மற்றும் வயிற்று பிரச்சனைகள் இருப்பவர்கள், தேனில் வெந்நீர் கலந்து குடிப்பதை தவிர்க்கவும். தேனில் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டுள்ளதால், அசிடிட்டியை அதிகரிப்பதுடன், நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், அஜீரணம் போன்றவை ஏற்படும்.
வாயு பிரச்சனை, வயிறு உப்புசம் உள்ளவர்கள் சுடுதண்ணீரில் தேன் கலந்து குடிக்கக்கூடாது. ஏனெனில் செரிமான செயல்முறையை பாதிப்பதுடன், வாயு தொல்லை, உயிறு உப்புசமும் அதிகரிக்கும்.
பல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை பல் சிதைவை ஏற்படுத்துவதுடன், பாக்டீரியா வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். பாக்டீரியா வளர்ச்சியடைவதால் பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் ஏற்படும்.
image: wikihow
அலர்ஜி ஏற்படுபவர்கள் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடக்கூடாது. தேனில் மகரந்த துகல்கள் இருக்கலாம். இதனால் அலர்ஜி எதிர்வினையை தூண்டுவதுடன், அரிப்பு, வீக்கம், தடிப்புகள், அனாபிலாக்ஸிஸ் போன்ற பிரச்சனையும் ஏற்படும்.
பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். தேனில் பல இயற்கை நொதிகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. வெந்நீரில் கலந்து குடிப்பதால் அனைத்து சத்துக்களும் அழிந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |