இந்த மூலிகை நீரை குடிச்சால் எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் அடங்கி ஒடுங்கிடும்!
உலகம் முழுக்க ஆஸ்துமாவால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சளி பிடித்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஏனெனில் தொடர் தும்மலும், இருமலும் இருக்கும் போது அவை சிறிது சிறிதாக சளி, இருமலை உண்டாக்கி நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயை தாக்குகிறது.
அதனால் தான் மூச்சுக்குழாயில் உட்சுவர்கள் சேதத்தை உண்டு செய்து அங்கு வீக்கத்தை உண்டாக்கி நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜனை தடுக்கிறது. எந்தவகை ஆஸ்துமாவாக இருந்தாலும் நீங்கள் இந்த மூலிகை குடிநீரை தயாரித்து குடித்துவந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் ஆடாதோடை - பொடி 50 கிராம் ( இலையாக கிடைத்தால் ஒரு கைப்பிடி) தூதுவளை - பொடி 50 கிராம் ( இலையாக கிடைத்தால் ஒரு கைப்பிடி) ஓமவள்ளி என்னும் கற்பூரவல்லி - ஒரு கைப்பிடி அளவு இலை வேப்பிலை - கொழுந்தாக அரை கைப்பிடி அளவு எலுமிச்சை இலை- ஒரு கைப்பிடி அளவு நஞ்சறுப்பான் - பொடி 50 கிராம் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் - தலா 30 கிராம் கொடுத்திருக்கும் பொருள்கள் அனைத்தையும் நிழலில் உலர்த்தி ( இலையாக இருந்தால்) அனைத்தையும் சேர்த்து ஒன்றாக பொடியாக அரைத்து சலித்து கண்ணாடி பாட்டிலில் வைக்க வேண்டும். இதை 3 முதல் 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ஆஸ்துமா நோயாளிகள் பிரச்சனை தலை தூக்கும் போதேல்லாம் காலையும், மாலையும் உணவுக்கு முன்பு இதை குடித்துவந்தால் போதும். பிரச்சனை தீவிரமாகாமல் பார்த்துகொள்ளலாம். இவை பக்கவிளைவில்லாதது என்பதால் எல்லா காலங்களிலும் இதை எடுத்துகொள்ளலாம். ஆஸ்துமாவின் தொடக்க காலமாக இருந்தால் தினமும் இந்த நீரை குடித்துவந்தால் ஆஸ்துமா பெருமளவு கட்டுப்பட்டுவிடும்.
மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் தொடக்க காலத்துக்கு முன்பிருந்தே குடித்துவந்தால் ஆஸ்துமா இருக்கும் இடம் தெரியாமல் போகும்.
இவை தவிர சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் என அனைத்துமே சுவாசப்பாதைக்கு மிகவும் நன்மை செய்யும் பொருள்கள்.
இந்த மூலிகை பொடியை நீரில் கலந்து குடித்துவந்தால் எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் கட்டுக்குள் இருக்கும். எல்லோருமே இதை குடிக்கலாம். எல்லாமே மூலிகை வகைகள் என்பதால் பக்கவிளைவுகளும் இல்லை.