காலையில் கறிவேப்பிலை போட்டு 1 டம்ளர் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
பொதுவாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பலரும் டீ அல்லது காபி தான் குடிப்பார்கள்.
இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், டீ அல்லது காபி குடித்தால் உற்சாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காபி, டீயை விட மூலிகை இலைகளை ஊற வைத்து தண்ணீர் குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.
தற்போது வரும் நோய்களுக்கு இதுவே சிறந்த தீர்வாகவும் இருக்கும். அப்படி நாம் தினமும் சமையலறையில் பார்க்கும் இலையான கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு குடித்தால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில், காலையில் கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலையின் பலன்கள்
1. கறிவேப்பிலை நீர் உடலுக்கு ஆரோக்கியமானது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை உற்சாகப்படுத்தும். அத்துடன் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.
2. கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் தலைமுடிக்கு ஊட்டம் கொடுத்து, முடி நுண்குழாய்களை வலுப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்தும். தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்களும் இந்த நீரை குடிக்கலாம்.
3. செரிமானத்திற்கு தேவையான நொதியம் கறிவேப்பிலையில் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.
4. கறிவேப்பிலை ஒரு இனிமையான மூலிகை நறுமணத்தை கொண்டிருப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். அதே சமயம், உடலில் இருந்து வரும் வாசணையும் அதிகமாகும்.
5. கறிவேப்பிலை நீரைக் குடிப்பது தசைகள் மற்றும் நரம்புகளைத் தளர்த்தி, மன அழுத்தம் குறைக்கிறது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறுகிறது.
6. கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உடலில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகள் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது. அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் பார்த்தக் கொள்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |