தேநீர் பருகியதும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளதா? ஆபத்து இனிமேல் செய்யாதீங்க
இந்தியாவில் பெரும்பாலான மனிதர்கள் தேநீர் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தேநீருக்கே அதிக முக்கியத்தும் அளித்து வருகின்றனர்.
ஆனால் சிலர் தேநீர் பருகிய பின்பு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவ்வாறான செயல் பாரிய ஆபத்தில் கொண்டு வந்துவிடுமாம்.
தேநீர் பருகிய பின்பு தண்ணீர் குடித்தால் என்ன பக்கவிளைவு ஏற்படும் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
டீ குடித்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம்
தேநீர் அடிக்கடி குடிக்கும் போது அதிகமான தாகம் ஏற்படுவதுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. ஒரு கப் டீயில் 50 மி.கி காஃபின் உள்ளதால் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது
சூடான உணவைத் தொடர்ந்து குளிர்ந்த உணவை உட்கொண்டால், தொண்டை, உணவுக்குழாய் பாதிப்பதுடன், பற்களில் நரம்பு பாதிக்கப்பட்டு, கூச்சம் ஏற்படுகின்றது.
தேநீர் பருகியதும் வயிற்றில் வாயு வெளியேறுவதால், தண்ணீர் குடிப்பார்கள். இது வயிற்றில் புண் ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கோடை காலத்தில் தண்ணீர் குடித்துவிட்டு டீ குடித்தால் மூக்கில் ரத்தப்போக்கு பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.