சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்துவது நல்லதா? பலரின் கேள்விக்கு பதில் இதோ
தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தினை அதிகரித்தாலும், சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்வி பெரும்பாலான நபர்களுக்கு எழுகின்றது.
சாப்பிட்டதும் தண்ணீர் பருகுவது ஆபத்தா?
நாம் எடுத்துக் கொள்ளும் உணவைப் பொறுத்தே சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் நன்மை ஆகுமா? அல்லது தீமை ஏற்படுமா? என்பது தெரியவரும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பொறுத்தவரை, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஏனெனில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ஆரோக்கியத்தை கொடுக்கும். இதனால் நச்சுக்கள் வெளியேறுகின்றது.
தண்ணீர் அதிகமாக பருகுவது நமது செரிமான அமைப்பினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், ஊட்டச்சத்துக்களை பெறுதவ்றகு உறுதி செய்கின்றது.
ஆனால் கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், தர்பூசணி போன்ற சில பழங்கள் உள்ளன, இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்கக்கூடாது.
மறுபுறம், பிரட், பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் இவை அஜீரணத்தை ஏற்படுத்துவதுடன், வயிற்று பிரச்சினைக்கும் வழிவகுக்குமாம்.
உணவுக்கு பிறகு சூடான தேநீர் அருந்துவது, உங்கள் உடலையும் மனதையும் தளர்த்தவும், சரியான செரிமானம் மற்றும் ஓய்வை ஊக்குவிக்கவும் உதவும். சிறிது வெந்நீர் கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் குளிர்ந்த நீரை கொடுப்பது செரிமான அமைப்பை பாதிப்பதுடன், செரிமான செயல்முறையையும் மெதுவாக மாற்றுகின்றதாம். ஆதலால் சாப்பிட்ட பின்பு 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரை பருகலாம்.
எனினும் சாப்பிட்ட பிறகு நேரடியாக தண்ணீர் குடிப்பது எப்போதும் ஒரு மோசமான விஷயம் அல்ல. அது நீங்கள் உட்கொள்ளும் உணவின் வகையைப் பொறுத்தது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |