ஏன் ஒரு கப் நீருடன் நாளை துவங்க வேண்டும்? - பல ஆய்வுகளின் வெளிச்சம்
பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் எந்த மனிதரும் உயிர் வாழ முடியாது. இதுவரையில் அப்படி வாழ்ந்த மனிதர்களும் அரிதாகவே இருக்கின்றனர்.
உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து நாளடைவில் குறைய ஆரம்பிக்கும். இதனால் நீங்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி வரும். இதனை தடுக்க நினைப்பவர்கள் நாளாந்தம் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
நம்மில் சிலர் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீயுடன் நாளை துவங்குவார்கள். இது அவர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்காது.
மாறாக யோகாசனம், உடற்பயிற்சி இப்படியான பயிற்சிகள் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். அதில் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் குடித்தால் பயிற்சிகளின் முழுமையான பலனை பெறலாம்.
காலையில் எழுந்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள தண்ணீர் குடிப்பது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் நாம் என்ன எடுத்து கொள்கின்றோமோ? அது தான் அன்றைய நாளுக்கான சக்தியை வழங்குகின்றது.
இதை தவிர தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட பலன்கள் உள்ளன. அப்படியான பலன்கள் என்னென்ன? என்பதனை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
ஒரு கப் நீரினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
1. இரவு தூக்கத்திற்கு பின்னர் உடலில் உடல் நீரிழப்பு ஏற்படும். அந்த சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் குடிக்கும் பொழுது நீர்ச்சத்து உடலில் அதிகரிக்கும். அத்துடன் உடலில் இருக்கும் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும்.
2. காலையில் தண்ணீர் குடிக்கும் ஒரு நபருக்கு சில மணிநேரங்களில் அவர்களுக்கு வளர்சிதை மாற்றம் 30% வரை அதிகரிக்கும். நாள் முழுவதும் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரிக்கும், எடை இழப்பு ஏற்படும்.
3. பல மணி நேரம் நிம்மதியான தூக்கத்திற்கு பின்னர் உடலில் நச்சுக்கள் குவிந்து காணப்படும். இது நாம் காலையில் குடிக்கும் தண்ணீரில் தான் வெளியேற்றப்படும். சிறுநீரகம் வழியாக நச்சுகள் வெளியேறும் செயற்பாடு நடைபெறும்.
4. காலையில் தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பு தூண்டப்படுகின்றது. இதனால் வழக்கமான குடல் இயக்கம் ஊக்குவிக்கப்படுகின்றது. மேலும், மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் காலையில் தண்ணீர் குடிப்பதன் காரணம் மலம் இலகுவாக வெளியேறும், ஊட்டச்சத்து உறிஞ்சலும் சிறப்பாக இருக்கும்.
5. ஆரோக்கியமான சருமத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சுருக்கங்களின் தோற்றம் குறைந்து அழுக்குகள் வெளியேறி இயற்கையானதொரு பளபளப்பு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |