நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? அப்போ வெறும்வயிற்றில் இதை குடிங்க
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு எந்தெந்த பானத்தினை குடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் புதிதாக தொடங்கும் நாள் மிகவும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று தான் பலரும் விருமபுவார்கள்.

அந்த வகையில் காலை வெறும் வயிற்றில் நாம் பருக வேண்டிய பானங்கள் என்னென்ன என்பதையும், சுறுசுறுப்பாக இருப்பதற்கு இந்த பானங்கள் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
காலையில் குடிக்க வேண்டிய பானம்
காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் பருகினால் உடல் சுத்தமாவதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும்.
வெறும் சுடு தண்ணீர் மட்டும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிகவும் நல்லதாகும். இவை குடலை சுத்தமாகி உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கின்றது.

இரவில் ஒரு ஸ்பூன் சீரகத்தினை தண்ணீரில் ஊற வைத்து அதனை கொதிக்க வைத்து காலையில் வெதுவெதுப்பாக குடித்தால் வயிறு உப்புசம் குறைவதுடன், உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ள அருகம்புல் அல்லது நெல்லிக்காய் சாறு இவற்றினை காலையில் பருகலாம். இவை ரத்தத்தினை சுத்திகரித்து, முகத்திற்கு நல்ல பொலிவை அளிக்கின்றது.

சீரகத்தினை போன்று வெந்தயத்தினை முதல்நாளில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலை வெறும்வயிற்றில் குடித்தால் உடல் சூடு தணிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இவை மிகவும் சிறந்ததாகும்.
ஆனால் காலையில் எழுந்து வெறும்வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை உண்டாக்குமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |