உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்கனுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எந்த காய்கறிகள் சாப்பிடலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரகம்
நமது உடலில் முக்கியமான உறுப்பு சிறுநீரகம் ஆகும். உடம்பிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்து வருகின்றது. இவை சரியாக செயல்படவில்லையெனில் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றது.
அதிலும் பொட்டாசியம், பாஸ்பரஸ் அல்லது சோடியம் போன்ற சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடும் போது நிலைமை மோசமாகிவிடும்.

சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் நமது உணவுப்பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சில பழங்களை தவிர்க்கவும் வேண்டும்.
அந்த வகையில் எந்தெந்த உணவுகள் சிறுநீரக செயல்பாட்டினை ஊக்குவிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இளநீர்
இளநீர் சிறுநீரக நோய்களுக்கு ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இது குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இது நிறைய ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
இதில் பொட்டாசியம் மற்றும் சோடியம் குறைவாக உள்ளதால் இது நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

இதை குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. அதனால் இது நம் சிறுநீரகங்களுக்கு நல்லது.
தண்ணீர்
தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் நம் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தண்ணீர் நிறைய குடித்தால் சிறுநீரக கற்கள் ஏற்படும் பிரச்சனையை குறைக்க முடியும். அது மட்டுமின்றி தண்ணீர் குடிப்பதால் நம் சீறுநீரகத்தை நீர்த்துப் போக செய்கிறது.

தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சமநிலையாக வைக்க உதவுகிறது. இதனால் நம் சீறுநீரகங்ககள் எந்த பாதிப்புமின்றி செயல்பட முடிகிறது.
வெள்ளரி
அதிக நீர் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் வெள்ளரி. இதில் அதிகம் நீர் உள்ளது. இதை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் இது நம் உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது.
இதை நாம் சாப்பிடும் போது நம் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் சிறுநீரக வீக்கத்தை குறைந்து செயல்பாட்டை அதிகரிக்கிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |