நரைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் 3 வகை ஜுஸ்.. செய்து பாருங்க பலன் நிச்சயம்
பொதுவாக மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களினால் நரைமுடி பிரச்சினை ஏற்படுகின்றது.
வயதான காலத்தில் முடி நரைப்பது என்பது இயற்கையான விடயம். ஆனால் இளவயதிலேயே முடி சிலருக்கு நரைக்கின்றன.
இதற்கான உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும் அல்லது சாப்பாட்டில் அதற்கான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை சரியாக செய்வதால் நரைமுடி பிரச்சினையை தாமதமாக்கலாம்.
தலைமுடியை சீராக வைத்து கொள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்கொள்வது அவசியம். முறையான சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்து கொள்வதால் தலைமுடியின் நிறம், வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கலாம்.
அந்த வகையில் நரைமுடி பிரச்சினைகள், கூந்தல் உதிர்வு உள்ளிட்டவைகளில் தாக்கம் செலுத்தும் சாறுகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
நரைமுடி பிரச்சினை
1. எலுமிச்சை
பொதுவாக எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கின்றது. இது உடலிலுள்ள கொலாஜன் தொகுப்புக்கு உதவியாக இருக்கின்றது.
சிட்ரஸ் பழம் என அழைக்கப்படும் எலுமிச்சை சாற்றை எடுத்து கொள்வதால் முன்கூட்டியே இருக்கும் நரை முடி தாமதமாக்கப்படுகின்றது.
2. புதினா இலைகள்
புதினா இலைகள் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்டது என பலரும் கூறுவார்கள். அதே வேளை புதினா இலைகளிலுள்ள சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடி நரைமுடி பிரச்சினையை இல்லாமலாக்குகின்றன.
3. தேங்காய் தண்ணீர்
தேங்காய் எண்ணெய் பயன்பாட்டினால் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரியாக்கலாம். நீரேற்றம் மற்றும் அத்தியாவசிய எலக்ட்ரோலைட் தேங்காய் நீரில் இருக்கின்றன.
இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். தலையில் இருக்கும் வறட்சியை குறைத்து கூந்தலை செழிப்பாக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |