மலச்சிக்கலுக்கு முடிவு கட்டணுமா? 5 எளிய இயற்கை வழிகள் இதோ!
தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்கங்கள், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகள் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். மலம் கழிப்பதில் சிரமம், வழக்கத்தைவிட குறைவான குடல் இயக்கம், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படும்.
இதனால் பலரும் விரக்தியடைந்தாலும், லேசான மற்றும் அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களால் மலச்சிக்கலுக்கு முடிவுகட்ட முடியும்.
அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில பானங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

1.வெல்லத் தண்ணீர்
வெல்லம் இயற்கையான இனிப்பூட்டியாகும். இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து, இரவில் உறங்கச் செல்லும் முன் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

2.எலுமிச்சை சாறு
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். மேலும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

3.ஆப்பிள் சாறு ஆப்பிள்
சாற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் சார்பிட்டால் மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற உதவும். சர்க்கரை சேர்க்காத தூய ஆப்பிள் சாற்றை பகலில் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.

4.விளக்கெண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் சக்திவாய்ந்த இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு, குடல் இயக்கத்தைத் தூண்டும். இரவில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

5.திரிபலா பொடி
நீர் ஆயுர்வேதத்தில் திரிபலா பொடிக்கு முக்கியத்துவம் உண்டு. இரண்டு தேக்கரண்டி திரிபலா பொடியை ஒரு குவளை வெந்நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பாக செய்ல்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |