கோடை காலத்தில் முலாம் பழ ஜுஸ் குடிச்சா உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க
கோடைகாலத்தில் வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். இந்த நேரத்தில் நாம் உடல் நீரேற்றத்துடன் இருப்பதற்காக அதற்கேற்ற உணவுகளை உண்போம்.
பொதுவாக எல்லோரும் இந்த கோடை காலத்தில் பழங்களில் ஜுஸ் செய்து குடிப்பார்கள். இவ்வாறு குடிப்பதால் நமது உடல் எப்போதும் நீா்ச்சத்து நிறைந்து இருக்கும்.
என்னதான் பல பழங்களில் ஜுஸ் குடித்தாலும் முலாம் பழ ஜுஸ் மிகவும் மலிவாகவும் சுவையாகவும் கிடைக்ககூடியது.
உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இந்த பழத்தில் ஜுஸ் செய்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முலாம் பழ ஜுஸ்
இந்த முலாம் பழத்தின் தோலை அகற்றி அதன் நடுவில் இருக்கும் பகுதியை மட்டும் தனியே எடுத்து நீங்கள் ஜுஸ் செய்து வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
1. முலாம் பழம் 90சதவீதம் தண்ணீர் உள்ளது. இதை வெயில் காலங்களில் குடித்தால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். எனவே இந்த ஜுஸ் கோடை காலத்தில் குடிப்பதற்கு மிகவும் உகந்ததாகும்.
2. இந்த பழத்தில் கலோரிகள் அதிகளவில் இல்லாமல் மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
3. நீர்ச்சத்து அதிகமாக காணப்டுவதால் உங்கள் செரிமானத்தை சீராக வைத்திருக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஜுஸ் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4. முலாம் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் சருமம் மிகவும் துய்மையாக இருப்பதுடன் பளபளப்பாகவும் இருக்கும். இதில் சர்க்கரை பயன்படுத்தாமல் தினமும் குடிக்கலாம்.
5. ரத்த அழுத்தம் என்பது இந்த கால கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாக காணப்படுகின்றது. இந்த முலாம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பழத்தில் செய்யப்படும் ஜுஸ் குடித்து வந்தால் மிகவும் நன்மை கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |