தண்ணீர் குறைவாக குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சினை ஏற்படும் ஜாக்கிரதை
தண்ணீர் குறைவாக குடித்தால் உடம்பில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்... அவை என்னென்ன பாதிப்பு என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நமது உடம்பானது 70 சதவீதம் தண்ணீரால் ஆனது என்பதை அறிந்திருக்கும் நாம், தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்.
ஒரு நாளில் நாம் குடிக்க வேண்டிய தண்ணீருக்கு குறைவாக இருந்தால், அது உடம்பில் பல வித தீமைகளை விளைவிக்கின்றது.
தண்ணீர் குறைவாக பருகினால் என்ன பாதிப்பு?
நீங்கள் குறைவாக தண்ணீர் பருகினால் அவை மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, செரிமான பிரச்சினையும் ஏற்படுத்தும்.
இதே போன்று குறைவான தண்ணீர் பருகினால் சிறுநீர் தொற்று ஏற்படும். ஆம் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறுநீரக பாதையில் நோய் தொற்று ஏற்படும்.
குறைவான தண்ணீரை நீங்கள் பருகினால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக கற்கள் ஏற்படவும் செய்கின்றது.
சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தோல் வறண்டு, சுருக்கங்கள் ஏற்படுவதுடன் வயதான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பிக்கும்.
போதிய அளவு தண்ணீர் குடிக்காதவர்கள் ஆற்றல் குறைந்து மூளை சரியான செயல்படாது என்றும் மனநிலையை கெடுப்பதுடன், தலைவலி பிரச்சினையையும் ஏற்படுத்தும்.