நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சை சாப்பிடலாமா? மருத்துவ விளக்கம்
நீரிழிவு நோயாளர்கள் பொதுவாக உலர் திராட்சையை தங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாமா என்பதை பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளர்கள்
தற்போது நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசமின்றி இந்த நோய் அனைவரையும் தாக்கி வருகின்றது. இதற்கு காரணம் பல இருந்தாலும் முக்கிய காரணம் வாழ்க்கை முறை தான்.
சக்கரை நோய் வந்துவிட்டால் அவர்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதிலும் மிக முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் இனிப்பான எந்த உணவுகளையும் உட்கொள்ள கூடாது.
ஆனால் சக்கரை நோயாளிகள் உலர் திராட்சை சாப்பிடலாமா என ஒரு கேள்வி இருக்கும். அவர்களுக்காக இந்த பதிவில் மருத்துவ விளக்கத்துடன் பார்க்கலாம்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?
மருத்துவர்களின் கூற்றுப்படி நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சை சாப்பிடலாம் என கூறப்படுகின்றது. ஆனால் 'வரையறுக்கப்பட்ட அளவு' மற்றும் 'சரியான வழி' என்பது இதில் மிகவும் முக்கியம்.
திராட்சையில் மிதமான கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது ரத்ததில் சக்கரை அளவை மிதமாக வைத்து கொள்ளும். திராட்சையில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிகமாக உள்ளன. ஒரு சிறிய கைப்பிடி திராட்சையில் நடுத்தர அளவிலான ஆப்பிள் அல்லது ஆரஞ்சு போன்ற கலோரிகள் மற்றும் சர்க்கரை இருக்கும்.
மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உட்கொள்ள சரியான முறை எது?
எனவே சக்கரை நோயாளிகள் திராட்சையை தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக, பாதாம், வால்நட்ஸ் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த நட்ஸ் வகைகளில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு சர்க்கரை அதிகரிப்பை மெதுவாக்குகிறது. இதனால் ரத்ததில் சக்கரை அளவ மிதமாக இருக்கும்.
இது தவிர சக்கரை நோயாளிகள் உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்வது அதிக நன்மை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சக்கரை நோயாளர்கள் என்றாலும் ஒவ்வொரு நபரின் உடலும் வித்தியாசமாக செயல்படுவதால், திராட்சையை சாப்பிட்ட பின்னர் கட்டாயம் சக்கரை பரிசோதனை செய்து பார்ப்பது முக்கியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |