தேன் சாப்பிட்டால் எடை குறையுமா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
சுவையான உணவுகளில் தேனும் ஒன்று.இதிலுள்ள சத்துக்கள் மனிதரிகளின் தேவையான நாளாந்த செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறது.
தேன் அடிக்கடி சாப்பிடும் பொழுது தலைமுடி முதல் சருமம் வரையிலான அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக சூடான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் பல நோய்கள் குணமாகும்.
நீரில் தேன் கலந்து சாப்பிடும் பொழுது எடை குறையும், அதே சமயம், செரிமான கோளாறுகளும் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் தேனும் உள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், தேன் கலந்து நீர் தயாரித்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதிவில் பார்க்கலாம்.
தேன் கலந்து குடித்தால் இவ்வளவு பலன்களா?
1. சூடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதனால் செரிமானக் கோளாறுகள் சரியாகும். அத்துடன் அவர்களின் எடையும் குறையும்.
2. சூடான நீரில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அத்துடன் வளர்ச்சி அதிமாகி, அவர்கள் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும்.
3. கொதிக்கும் தண்ணீரில் சில இஞ்சி துண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை வடிக்கட்டிய பின்னர் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இந்த தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் சளி, இருமல் பிரச்சினை குணமாகும்.
4. ஒரு டம்பளர் சூடான நீரில் 1-2 ஸ்பூன் தேன் கலந்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் பலன்கள் அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |