தினமும் கிரீன் டீ குடிக்கிறீர்களா? இந்த 3 பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கை!
What Happens to Your Body After Drinking Green Tea for 30 Days : பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் பலரும் நாடும் ஒரு ஆரோக்கியமான பானமாக கிரீன் டீ (Green Tea) விளங்குகிறது என்றால் மிகையாகாது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், வழக்கமான தேநீருக்குப் பதிலாக கிரீன் டீயைத் தெரிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை வழங்கக்கூடிய கிரீன் டீயைக்கூட அளவுக்கு அதிகமாகவோ அல்லது தவறான நேரங்களிலோ தொடர்ந்து பருகினால் உடலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?
குறிப்பாக, தொடர்ந்து 30 நாட்களுக்கு அதிகளவில் கிரீன் டீ அருந்தும்போது தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவது முதல் வயிற்றில் எரிச்சல், குமட்டல் மற்றும் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதில் ஏற்படும் பாதிப்பு வரை பல்வேறு பிரச்சினைகள் உருவாகலாம்.
அப்படியென்றால், கிரீன் டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய இந்த மூன்று முக்கிய பக்க விளைவுகள் என்ன? எந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்? எவ்வளவு அளவில் குடிப்பது பாதுகாப்பானது? இது தொடர்பான முக்கியமான தகவல்களை இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |